காளையுடன் பைக்கில் டபுள்ஸ்… வைரலாகும் வீடியோ!

காளையுடன் டபுள்ஸ்
காளையுடன் டபுள்ஸ்

நைஜீரியாவில் இளைஞர் ஒருவர் காளையை பைக்கில் அழைத்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலர் வெளியே செல்லும் போது தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை பைக் அல்லது காரில் ஏற்றிச் செல்வது சகஜமாகிவிட்டது. ஆனால், ஒரு காளை பைக்கில் ஏற்றிச் செல்வதை பார்த்தீர்களா? ஆம், இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை பார்த்த பலரும் தங்கள் ஆச்சரியத்தையும், வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நைஜீரியாவில் ஒரு இளைஞர் தனது பைக்கில் காளையை ஏற்றிச் செல்கிறார். இது போன்ற தனித்துவமான சவாரியை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த நபர் எப்படி காளையை பைக்கில் உட்கார வைத்து, பின்னால் அமர்ந்து பைக்கை ஓட்டுகிறார் என்பதை வீடியோவில் காணலாம். பெரிய கொம்புகளுடன் கூடிய காளையும் மிகுந்த சாதுவாக, ஜாலியாக பைக்கில் அமர்ந்து செல்கிறது.

இந்த வேடிக்கையான காட்சியை கார் ஓட்டுநர் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார், இது சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. சிலர் இந்த வீடியோவில் வருபவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்ற வினோதமான செயல்களைச் செய்வதாகவும் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in