மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்கள்: இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை!

மியான்மர் ராணுவ வீரர்கள்
மியான்மர் ராணுவ வீரர்கள்

மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்த மியான்மர்  ராணுவ வீரர்கள் 277 பேர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக  இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியான்மர் வீரர்கள்
மியான்மர் வீரர்கள்

வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர ராணுவ முகாம்களில் கிளர்ச்சி படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.  அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்காக, மியான்மர் ராணுவத்தினர்  இந்திய எல்லைக்குள் நுழைகின்றனர்.

இவ்வாறு சில தினங்களுக்கு முன்  இந்திய எல்லைக்குள்  277 மியான்மர் வீரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை மீண்டும் மியான்மருக்கு  அனுப்ப இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. மிசோரம் மாநில தலைநகர் ஐசாலிருந்து மியான்மர் விமானப் படை விமானங்கள் மூலம் மியான்மரின் ரக்கைன் மாகாணத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

மியான்மர் வீரர்கள்
மியான்மர் வீரர்கள்

இதுகுறித்து அசாம் ரைஃபிள்ஸ் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தியா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் சந்திக்கும் மிசோரத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தின் வழியாக மியான்மர் ராணுவத்தினர் 277 பேர் துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் கடந்த ஜன.17-ல்  நுழைந்தனர். கர்னல் ஒருவர் தலைமையிலான இக்குழுவில் 36 ராணுவ அதிகாரிகள், 240 வீரர்கள் உள்ளனர். இவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 359 மியான்மர் வீரர்களை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளோம். கடந்த நவம்பரிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த 635 மியான்மர் வீரா்கள் அவா்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in