‘இந்தியாவின் சகோதர சகோதரிகளே...’ சுற்றுலா முற்றிலும் படுத்ததில் கெஞ்சல் கோரிக்கை விடுக்கும் மாலத்தீவு

மாலத்தீவு
மாலத்தீவு
Updated on
2 min read

மாலத்தீவு அமைச்சர்களின் வாய்க்கொழுப்பு, அந்நாட்டின் சுற்றுலாத்துறை முற்றிலும் இற்றுப்போகும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மாலத்தீவு சுற்றுலா அமைப்பு சார்பில் இந்தியர்களிடம் பகிரங்கமாக கெஞ்சும் சூழலையும் உருவாக்கி உள்ளது.

இந்தியாவின் பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை வெளியிட்டன. இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு சென்ற மோடி, அங்கத்திய தனது அனுபவங்களை புகைப்படமாக பொதுவெளியில் பதிவிட்டார். அவை லட்சத்தீவுகள் குறித்து உலகமெங்கும் மக்கள் மத்தியில் தேடும் அளவுக்கு வைரலானது. கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றில் லட்சத்தீவுகள் முன்னிலை வகித்தது.

லட்சத்தீவில் பிரதமர் மோடி.
லட்சத்தீவில் பிரதமர் மோடி.

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை வளர்த்துவிடுவதற்காக இந்தியப் பிரதமர் இவ்வாறு செய்கிறார் என மாலத்தீவு ஆட்சியாளர்கள் கொதித்தனர். அங்கு அண்மையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, இந்தியாவின் சார்பு நிலையிலிருந்து சீனாவின் சார்பு நிலைக்கு மாலத்தீவு மாற்றம் கொண்டது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக 3 அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை வெளியிட்டனர்.

இதற்கு இந்தியர்கள் மட்டுமன்றி மாலத்தீவு மக்கள் மத்தியிலேயே அதிருப்தி எழுந்ததில், அந்த பதிவுகள் நீக்கப்பட்டன; 3 அமைச்சர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இந்தியர்கள் மத்தியில் மாலத்தீவுக்கு எதிரான போக்கு அதிகரித்தது. சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது மாலத்தீவு எதிர்ப்பை பிரச்சாரமாக மேற்கொண்டனர். ஆன்லைன் சுற்றுலா நிறுவனமான ’ஈஸி மை ட்ரிப்’ மாலத்தீவுக்கான தனது விமானப் பயணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

இதனால் அங்கு சுற்றுலாத்துறை முற்றிலுமாக படுத்துவிட்டதில் ’மாலத்தீவு டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கம்’ சார்பாக இந்தியர்களுக்கு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய சகோதர சகோதரிகளே என்ற விளிப்புடன் தொடங்கி, மாலத்தீவு சுற்றுலாவை ஆதரிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

மாலத்தீவு டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கம் கோரிக்கை
மாலத்தீவு டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கம் கோரிக்கை

“மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வரையறுக்கும் நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இரு தேசங்களை இணைக்கும் பந்தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்கள் இந்திய சகாக்களை, நேசத்துக்குரிய சகோதர சகோதரிகளாக நாங்கள் கருதுகிறோம்.

மாலத்தீவின் உயிர்நாடியாக சுற்றுலா உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு பங்களிக்கிறது. இத்துறையில் பணிபுரியும் சுமார் 44,000 மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. சுற்றுலாவில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம் எங்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை கட்டவிழ்த்துவிடும்” என்று தொடங்கி கெஞ்சல் கோரிக்கைகளை விடுத்துள்ளது. மாலத்தீவு டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கத்தின் கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!

பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!

இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in