
காசா மருத்துவமனை மீது ஏவுகணை வீசி அங்கிருந்த 500 அப்பாவிகளின் மரணத்துக்கு காரணம், இஸ்லாமிய ஜிஹாத் என்ற பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவே என இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.
வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியதில், லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலமானார்கள். ஆனால் தெற்கு காசாவிலும் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவே, குண்டுவீச்சுகளின்போது அங்குள்ள அல் அலி என்ற மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த சூழலில் மருத்துவமனையை தாக்கிய ஏவுகணை ஒன்றால், அந்த வளாகம் வெடித்துச் சிதறியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அங்கு அடைக்கலமாகி இருந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பலியானார்கள். மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுவீசி 500 பேரை கொன்றதாக செய்தி வெளியானதில், சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்தன.
இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பின. இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை, போர்குற்ற நடவடிக்கை என்றெல்லாம் குற்றம்சாட்டினார்கள். இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்த பாலஸ்தீனம், 3 நாள் தேசிய துக்க அனுசரிப்பை அறிவித்தது. இதனிடையே, ’அல் அலி மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் அல்ல’ என இஸ்ரேல் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. காசாவில் செயல்படும் இஸ்லாமிய ஹிஜாத் என்ற பயங்கரவாதக் குழுவே மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி இந்த அமைப்பினர் ஏவிய ராக்கெட் ஒன்று, தோல்விகரமானதில், மருத்துவமனை மீது விழுந்து அது வெடித்திருப்பதாக இஸ்ரேல் மேலும் விளக்கம் தந்துள்ளது. காசாவில் செயல்படும் இஸ்ரேலுக்கு எதிரான முதன்மையான போராளி குழு ஹமாஸ். எனினும், அதே போன்று இஸ்ரேலுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் போராளிக்குழுக்கள் அங்கே மேலும் உள்ளன. அவற்றில் ஹமாஸ் அமைப்புக்கு அடுத்த பெரிய அமைப்பாக இஸ்லாமிய ஜிஹாத் உள்ளது. தற்போதை 500 பேர் பலியான மருத்துவமனை தாக்குதலுக்கு இந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பே காரணம் என இஸ்ரேல் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேல் அளித்த விளக்கம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சர்வதேச சமூகம் மற்றும் ஊடகங்களின் பரிசீலனையில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!