
ஹமாஸுக்கு எதிரான போரில், இஸ்ரேல் மீது ஐநா சபை குற்றம்சாட்டியிருந்த நிலையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பேசி இருந்த ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ஹமாஸ் மீதான பதிலடி என்ற பெயரில், பாலஸ்தீனிய மக்கள் மீது ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல என தெரிவித்திருந்தார். சாமானிய மக்களை கொல்வதும், காயப்படுத்துவதும், கடத்தி செல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலார்ட் எர்டென், குட்டேரஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ஐநாவிற்கு பாடம் புகட்டும் வகையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு இஸ்ரேல் விசா வழங்காது எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?