தீவு மக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்த ருவாங் எரிமலை வெடிப்பு... இந்தோனேசியாவில் பரபரப்பு

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு
Updated on
2 min read

இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை தனது வெடிப்பை தொடர்ந்து வரும் நிலையில், அருகிலுள்ள தீவு மக்கள் அங்கிருந்து நிரந்தரமாக இடம்பெயரும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை கடந்த மாதம் எரிமலை குழம்பினை கக்கத்தொடங்கியது. இது தற்போது வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ஒரு தீவின் முழு மக்களையும் நிரந்தரமாக இடமாற்றம் செய்கிறது. எரிமலை வெடிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக நிரந்தர இடமாற்றத்தை இந்தோனேசியா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளது.

இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலையும் அதன் வெடிப்புகளும் புதிதல்ல என்ற போதும், இந்த மாற்றம் அந்த தேசத்துக்கு வேறு அனுபவமாகி இருக்கிறது. கடந்த மாதம் ருவாங் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கியது. இது இந்தோனேசியாவின் பல விமான நிலையங்களை மூடவும், விமானங்கள் ரத்து செய்யப்படவும் காரணமானது.

ருவாங் எரிமலை அருகிலுள்ள தீவு அதே பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுமார் 10,000 மக்களும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சுலவேசி தீவின் பொலாங் மோங்கோண்டோவிற்கு வுக்கு நிரந்தமாக மாற்றப்படுகின்றனர். இதனை பொதுப்பணித்துறை மற்றும் வீட்டு வசதி அமைச்சர் பாசுகி ஹடிமுல்ஜோனோ உறுதி செய்துள்ளார். அதிபர் ஜோகோ விடோடோவுடனான அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. பொதுமக்கள் வெளியேற்றத்திற்குப் பிறகு, இந்தோனேசிய அரசாங்கம் ருவாங் தீவை ஒரு பாதுகாப்பு தளமாக நியமிக்க முடிவு செய்துள்ளது. எரிமலை வெடிப்பால் எரிமலையின் சில பகுதிகள் சரிந்தால், சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கையால், மே 14 வரைக்குமான சுனாமி அவசரகால நிலையும் அங்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ருவாங் எரிமலை வெடிப்பை பார்வையிடுவோர்
ருவாங் எரிமலை வெடிப்பை பார்வையிடுவோர்

எரிமலை வெடிப்பால் எரிமலையின் சில பகுதிகள் சரிவு கண்டதில், சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மே 14 வரை அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில், பாலியில் உள்ள அகுங் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 40,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சுற்றுலாவில் தற்காலிக மந்தநிலை ஏற்பட்டது. சுமார் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பையும் இந்தோனேசியா எதிர்கொண்டது.

சுமார் 27 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுக் கோடுகளின் தொடரான ​விபரீத ’நெருப்பு வளைய’த்தின் மீது அமர்ந்திருக்கிறது. மேலும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவின் ஆயிரத்துக்கும் மேலான தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட, புகையைக் கக்கும் எரிமலைகள் பரவியுள்ளன. இவற்றுக்கு அப்பால் இப்போதைக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயத்தில் அவற்றைவிட அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள் காத்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in