டைட்டானிக் படத்தில்
டைட்டானிக் படத்தில்

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

Published on

டைட்டானிக் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஹாலிவுட் சினிமா நடிகர் பெர்னார்ட் ஹில் உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார். அவருக்கு வயது 79. 

பெர்னார்ட் ஹில்
பெர்னார்ட் ஹில்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த 1944-ல் பிறந்த பெர்னார்ட் ஹில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாடக கலையில் டிப்ளோமா முடித்தார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். 

கடந்த 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டைட்டானிக்’ படத்தில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்திருந்தார். அந்த படத்தில் கேப்டன் எட்வர்ட் ஜே.ஸ்மித் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். தி ஸ்கார்பியன் கிங், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 1982-ல் வெளிவந்த காந்தி படத்திலும் நடித்துள்ளார்.

பெர்னார்ட் ஹில்
பெர்னார்ட் ஹில்

அமெரிக்க நடிகையானா மரியானாவைத் திருமணம் செய்திருந்த இவர்களுக்கு கேப்ரியல் எனும் மகன் உள்ளார். சுமார் 50 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கிய அனுபவம் கொண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தியை அறிந்து திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகை பார்பரா டிக்சன் வெளியிட்டுள்ள பதிவில்,   "பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.  நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ (John Paul George Ringo) மற்றும் பெர்ட் (Bert), வில்லி ரசல் (Willy Russell) போன்ற அற்புதமான நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி" என குறிப்பிட்டுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in