கனடாவிலிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இந்திய தூதர் பேச்சால் பரபரப்பு

கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா
கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்கள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் எச்சரிக்கை வரம்பை கடந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கவலை தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடுகள், இந்தியா - கனடா உறவுகளில் ராஜிய ரீதியிலான உறவுகளில் நெருக்கடிகளை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய அரசு உடந்தை என கனடா குற்றம்சாட்டி வருகிறது. நிஜ்ஜார் கொலை வழக்கில் சமீபத்தில் மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்தனர்.

இந்தியா - கனடா உறவு
இந்தியா - கனடா உறவு

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, நேற்று வெளிநாட்டு உறவுகளுக்கான மாண்ட்ரீல் கவுன்சிலின் சிந்தனைக் குழுவில் இந்தியா -கனடா இடையிலான உறவு குறித்து பேசினார். அவர் பேசியதாக 'சி டிவி' செய்தி தகவல் கூறுவதாவது:

இந்தியாவிலிருந்து தங்கள் தாயகத்தை பிரிக்கக் கோரும் கனடாவில் உள்ள சீக்கிய குழுக்கள், தேசிய பாதுகாப்பு விஷயமாக இந்தியா கருதும் ஒரு பெரிய சிவப்பு கோட்டை கடந்துள்ளனர்.

இந்தியாவின் தலைவிதியை இந்தியர்கள் தீர்மானிப்பார்கள்; வெளிநாட்டவர்கள் அல்ல. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் நிறைய சிக்கலை சந்தித்த போதிலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சாதகமான நிலையிலேயே உள்ளது.

தற்போதைய பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன. இதற்காக அமர்ந்து பேச நாங்கள் தயாராக உள்ளோம்.

தற்போதைய எதிர்மறையான நிலைக்கு, பத்தாண்டு பழைய பிரச்சினையில் கனடாவின் தவறான புரிதலுடன் தொடர்புடையவை. கனடாவிலிருந்து வெளிப்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எனது முக்கிய கவலையாக உள்ளது. இந்தியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை. எனவே புலம்பெயர்ந்த எவரும் வெளிநாட்டவராகக் கருதப்படுவார்கள்.”

இவ்வாறு சஞ்சய் குமார் வர்மா பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in