அதிகரிக்கும் மாலத்தீவு நெருக்கடி... இந்திய துருப்புகளுக்கு பதிலாக சிவிலியன்களை நியமிக்க முடிவு

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

மாலத்தீவில் இருக்கும் இந்திய துருப்புகள் வெளியேறுவதற்கு அந்த நாட்டு அதிபர் கெடு விதித்திருப்பதால், ராணுவத்தினருக்கு மாற்றாக சிவிலியன்களை அங்கே நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக, மனிதாபிமான சேவைகளை வழங்கும் விமானங்களை இந்தியாவில் இருந்து இயக்கும், சிவில் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, தனது சீன சார்பு கொள்கை காரணமாக தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். அவற்றில் முக்கியமானதாக, அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15-க்குள் திரும்பப் பெற வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

இதனையடுத்து ராஜதந்திர நடவடிக்கையாக, ராணுவ வீரர்களுக்கு பதிலாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சிவிலியன்களை அங்கே பணியில் நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

75 இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக தெரிய வருகிறது. மாலத்தீவுக்கு உதவும் அவசரகால உதவிகளை ஒருங்கிணைப்பது, அங்கிருந்து நோயாளிகளை கொண்டு செல்வது மற்றும் கடலில் சிக்கும் மக்களை மீட்பது ஆகியவை அவர்களின் பணிகளில் அடங்கும். இதன் பொருட்டு நட்பு தேசமாக விளங்கிய மாலத்தீவுக்கு, முன்னதாக ஒரு டோர்னியர் விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கி இருந்தது.

கடந்தாண்டு முகமது முய்ஸு ஆட்சிக்கு வந்தது முதலே அவரது சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு, அதன் மறுபக்கத்தில் இந்தியாவுக்கு எதிரானதாக திரும்பியது. இதனால் இந்தியா - மாலத்தீவு இடையிலான இணக்கம் குறைந்தது. இதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்திய துருப்புகளை வெளியேற்றுவது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

ஜனவரி 2 அன்று இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் சந்தித்து விவாதித்தது. அதில் மார்ச் 10 முதல் மாலத்தீவில் இருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெறத் தொடங்கும் என்றும், மே 10-க்குள் அந்த செயல்முறையை முடிப்பதாகவும் இந்தியா ஒப்புதல் தெரிவித்தது.

மாலத்தீவு
மாலத்தீவு

இதனிடையே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்றைய தினம் செய்தியாளர்களிடம், “மாலத்தீவிலிருந்து திரும்பப் பெறப்படும் இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக, திறமை வாய்ந்த இந்திய தொழில்நுட்ப துறையினர் மற்றும் சிவிலியன்கள் அங்கே நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார். இவர்கள் மாலத்தீவுக்கான மனிதாபிமான உதவிகளை அவை அவசியப்படும்போது ஒருங்கிணைக்க உதவுவார்கள் எனவும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in