1,643 கி.மீ-க்கு மியான்மர் எல்லையில் வேலி; அமெரிக்காவைப் போல் முடிவெடுத்த இந்தியா!

இந்தியா மியான்மர் எல்லையில் உள்ள வேலி
இந்தியா மியான்மர் எல்லையில் உள்ள வேலி

மியான்மரில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியா-மியான்மர் இடையே உள்ள 1,643 கிலோமீட்டர் எல்லையில் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வளர்ந்த நாடான அமெரிக்காவிற்குள், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் புகுந்து வருகின்றனர். இவ்வாறு வரும் அகதிகள் காரணமாக உள்நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால் இதனை தடுப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மெக்சிகோ அமெரிக்கா இடையேயான எல்லைக்கோடு பகுதியில் சுவர் எழுப்பும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் இந்த சுவர்கள் முடிவு பெற்றுள்ள நிலையில், முடிவு பெறாத பகுதிகளில் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் உள்ள வேலி
அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் உள்ள வேலி

இதனிடையே சமீப ஆண்டுகளாக மியான்மர் நாட்டிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைவது அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ராணுவமும், எல்லைப் பாதுகாப்பு படையும் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதும் ஊடுருவலை தவிர்ப்பது சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதால், இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வது என இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

1,643 கிலோமீட்டருக்கு வேலி அமைக்க இந்தியா முடிவு என தகவல்
1,643 கிலோமீட்டருக்கு வேலி அமைக்க இந்தியா முடிவு என தகவல்

இதன்படி இந்தியா-மியான்மர் இடையேயான 1,643 கிலோமீட்டர் தூர எல்லையில் வேலி அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இருநாடுகளுக்கு இடையே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையே இருந்து வரும் ஒப்பந்தங்களின் அடிப்படையில், இரு நாடுகளிலிருந்தும் பொருளாதார ரீதியாக சென்று வருவதற்கு எவ்வித தடையும் இருக்காது. ஆனால் இந்த வேலி மூலமாக ஊடுருவலை தடுக்க முடியும் எனவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தி வரப்படுவது தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1826ம் ஆண்டு, முதல் பர்மா போருக்கு பிறகு எண்டாபோ ஒப்பந்தம் மூலமாக, இந்தியா-பர்மா இடையேயான எல்லையை ஆங்கிலேயர்கள் வகுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து 1948ம் ஆண்டு பர்மா தனி நாடாக உருவானதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பாஸ்போர்ட் சட்டங்கள் அமலுக்கு வந்தது. மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கு பிறகு இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in