'தாயகத்தை விட்டுச் செல்ல நான் மலாலா அல்ல... எனது இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன்' - இங்கிலாந்தில் கர்ஜித்த காஷ்மீர் பெண் பத்திரிகையாளர்!

காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிர்
காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிர்

”தாயகத்தை விட்டுச் செல்வதற்கு நான் மலாலா யூசுப்சாய் அல்ல... எனது இந்தியாவில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிர் பேசியது சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய யானா மிர் (இடமிருந்து 2வது)
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய யானா மிர் (இடமிருந்து 2வது)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் 'சங்கல்ப் திவாஸ்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஷ்மீர் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மிர் பங்கேற்று இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பிரச்சாரத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தி பேசினார்.

இக்கூட்டத்தில் யானா மிர், "நான் மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் எனது தாயகமான இந்தியாவில் ஒரு பகுதியான காஷ்மீரில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் ஒருபோதும் ஓடிப்போய் உங்கள் நாட்டில் அடைக்கலம் தேட வேண்டியதில்லை. நான் ஒருபோதும் மலாலா யூசுப்சாய் ஆக மாட்டேன். ஆனால் எனது நாட்டை, முன்னேறும் எனது தாயகத்தை ஒடுக்கப்பட்டதாகக் கூறும் மலாலாவின் அவதூறுகளை நான் எதிர்க்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் இதுபோன்ற அனைத்து அவதூறுகளையும் நான் ஆட்சேபிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் காஷ்மீருக்குச் செல்ல ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. ஆனால் அங்கு அடக்குமுறைகள் நிகழ்வதாக கதைகளை உருவாக்குகிறார்கள்.

மதத்தின் அடிப்படையில் இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களிடையே பிளவை ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஆண்டு சங்கல்ப் திவாஸ் அன்று, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும், எங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் சர்வதேச ஊடகங்களில் அல்லது சர்வதேச மனித உரிமை மன்றங்களில் எனது நாட்டை இழிவுபடுத்துவதை நிறுத்துவார்கள் என நான் நம்புகிறேன்.

தேவையற்ற சீற்றத்தை நிறுத்துங்கள். இங்கிலாந்தில் அமர்ந்துகொண்டு இந்திய சமூகத்தை பிளவுப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள். பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் தாய்மார்கள் ஏற்கெனவே தங்கள் மகன்களை இழந்துள்ளனர். எங்களைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள். எனது காஷ்மீரி சமூகத்தை நிம்மதியாக வாழ விடுங்கள். நன்றி, ஜெய் ஹிந்த்” என்றார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் யானா மிர் (இடது)
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் யானா மிர் (இடது)

இங்கிலாந்தில் உள்ள ஜம்மு, காஷ்மீர் ஆய்வு மையம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, அப்பிராந்தியத்தின் சமூக, கலாசார மற்றும் அரசியலின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு இரையான மிர்பூர்-முசாபராபாத் மற்றும் கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் போன்ற பகுதிகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இக்கூட்டம் எடுத்துரைத்தது.

இதையும் வாசிக்கலாமே...


அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!

திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!

மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in