மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!

’லால்சலாம்’ படக்குழு
’லால்சலாம்’ படக்குழு

ரஜினிகாந்த் நடித்த 'லால்சலாம்' படம் அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

'லால் சலாம்' படத்தில்  டிகர்  ரஜினிகாந்த்
'லால் சலாம்' படத்தில் டிகர் ரஜினிகாந்த்

திரைத்துறை பிரபலங்களின் வாரிசுகள் அத்துறைக்கு வருவது புதிது கிடையாது. அப்படி நடிகர் ரஜினிகாந்தின் இரு மகள்களும் அப்பாவைப் போல நடிக்காமல் இயக்கத்திற்கு வந்தனர். ‘3’ படம் மூலம் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்குநரானார். அதன் பிறகு சில படங்கள் இயக்கியவர் குடும்பப் பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார்.

அவர் மீண்டும் இயக்கத்திற்கு வந்த படம்தான் ‘லால்சலாம்’. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி காந்த் நடித்திருந்தார். இதன் இசைவெளியீட்டு விழாவில், கதாபாத்திரம் பிடித்துப் போய்தான் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டார் எனவும், தான் கஷ்டத்தில் இருந்தபோது ‘லால்சலாம்’ படவாய்ப்புக் கொடுத்தார் எனவும் ஐஸ்வர்யா சொன்னார். ரஜினியும் பேசும்போது, சினிமாவில் ஐஸ்வர்யா இயக்குநராக நல்ல இடம் பிடிக்க வேண்டும் என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

லால் சலாம்
லால் சலாம்

ஆனால், படம் வெளியானதும் இதன் மீது இருந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாது, ரூ. 20 கோடி வசூலுக்கேத் தள்ளாடுகிறது என்றெல்லாம் தகவல் வெளியானது.

மகளுக்கு தான் வாய்ப்புக் கொடுத்தும் அவர் அதை சரியாகப் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் ரஜினிக்கு இருப்பதாகவும் அவரது நண்பர் வட்டாரங்கள் கூறுகின்றன. இருந்தாலும், மக்கள் மத்தியில் முடிந்தளவு படத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக படக்குழுவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். படம் வெளியாகி இரண்டு வாரங்களாகிறது என்பதை முன்னிட்டே இந்த சந்திப்பு என்று தயாரிப்பு நிறுவனமான லைகா கூறியுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், " படத்தின் காட்சிகள் சுமாராக இருந்தது. ஆனால் ரஜினியின் திரை இருப்பு அதைக் காப்பாற்றியிருக்கிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in