கெரில்லா தாக்குதலுக்கு தயாராகும் ஹமாஸ்... காசா வீதிகளில் இஸ்ரேல் வீரர்களை கொல்லத் திட்டம்!

ஹமாஸ் ஆயுதக் குழுவினர்
ஹமாஸ் ஆயுதக் குழுவினர்

போதுமான உணவு, ஆயுதங்கள் ஆகியவற்றை சுரங்கப் பாதைகளில் பதுக்கியிருக்கும் ஹாமாஸ் ஆயுதக் குழுவினர், காசா வீதிகளில் இஸ்ரேல் வீரர்கள் மீது கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கின்றனர்.

’போரை நாங்கள் தொடங்கவில்லை; ஹமாஸ் அழியும் வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாது’ இப்படியான அறிவிப்புடன் காசா மீதான தாக்குதலுக்கு அக்.7 அன்று உத்தரவிட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அதற்கேற்ப நீர், நிலம், வான் என சகல வழிகளிலும் காசாவை சூழ்ந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீன மக்களை கொன்றுக் குவித்து வருகின்றன.

ஹமாஸ்
ஹமாஸ்

’ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி குடியிருப்புகளில் ஒளிந்திருக்கின்றனர்’ என்ற விளக்கத்துடன் குண்டுகள் வீசி காசா மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. இதுவரை அங்கு உயிர்ப்பலினோர் எண்ணிக்கை 9000-ஐ தாண்டியுள்ளது. இதில் பெரும்பங்கினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

நடப்புத் தாக்குதலோடு ஹமாஸ் அறவே ஒழியப்போகிறது என்ற இஸ்ரேலின் கணிப்பை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பொய்யாக்குகிறது. ஹமாஸ் தரப்பிலிருந்து ராய்ட்டர்ஸ் சேகரித்த தகவல்கள் அந்தளவுக்கு வீரியமானவை. காசாவின் நிலப்பரப்புக்கு கீழே பல கிமீ நீளத்துக்கான சுரங்கப் பாதைகளில் பல்லாயிரம் ஹமாஸ் போராளிகள் தங்கவும், அவர்களுக்கான உணவு மற்றும் ஆயுதங்களை சேகரிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

ஹமாஸ்
ஹமாஸ்

இவற்றைக்கொண்டு கெரில்லா போர் முறையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை காசா வீதிகளில் மறித்துக்கொல்ல ஹமாஸ் போராளிகள் காத்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்ரேலை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கவும் ஹமாஸ் முடிவு செய்திருக்கிறது. இதற்கான உதாரணத்தை அக்.7 தாக்குதலின்போதே ஹமாஸ் நிரூபித்துவிட்டது. இஸ்ரேல் உளவுப்படைகள் கண்களில் மண் தூவி மிகக்கொடூரமான தாக்குதலுடன் தொடங்கிய ஹமாஸ், நீண்ட கால போருக்கு ஆயத்தமாகவே இருப்பதாய் அந்த செய்திகள் நீள்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in