மயக்க மருந்து இல்லாது நடைபெறும் அறுவை சிகிச்சை... தொடரும் காசா மருத்துவமனை சோகங்கள்!

அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் காயமடைந்து, அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்
அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் காயமடைந்து, அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

காசா மருத்துவமனை மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் உலகை உலுக்கி உள்ள சூழலில், அங்கிருந்து வெளியாகும் செய்திகள் மேலும் பதைபதைப்பை கூட்டுகின்றன.

தெற்கு காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று மாலை குண்டு வீசப்பட்டதில் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசாது என்ற நம்பிக்கையில் ஏராளமான பொதுமக்களும் அங்கே தஞ்சமடைந்ததில், பலியானோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்தது.

மருத்துவமனை தாக்குதலில் கொல்லப்பட்டோர்
மருத்துவமனை தாக்குதலில் கொல்லப்பட்டோர்

தாக்குதலுக்கு ஆளான மருத்துவமனையில் இருந்து, படுகாயத்துடன் உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றும் பணிகள் அருகிலுள்ள இதர மருத்துவமனைகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் படுக்கைகள் காலியாக இல்லாதது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றும் பணிகள் சவாலாகி வருகின்றன.

இதனால் தரையில் நோயாளிகள் கிடத்தப்பட்டு அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக அவை இன்றியே அறுவை சிகிச்சைகளை நடத்தியதாகவும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரது ஃபேஸ்புக் பதிவு விவரிக்கிறது.

அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் பாலஸ்தீன போராளிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்கள். மருத்துவமனை மீதான தாக்குதல், இஸ்ரேலின் வான் தாக்குதல் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மாறாக, இஸ்லாமிய ஜிஹாத் என்னும் இன்னொரு பாலஸ்தீன போராளி அமைப்பின் தோல்வியடைந்த தாக்குதல் முயற்சி என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இன்று இஸ்ரேல் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் கூற்றையே வழிமொழிந்திருக்கிறார். காசா மருத்துவமனை துயரம் காரணமாக ஏவுகணைத் தாக்குதலுக்கு இடைவேளை விட்டிருந்த ஹமாஸ் போராளிகள், ஜோ பைடன் வருகை காரணமாக தங்களது 12 மணி நேர அமைதியை முறித்துக்கொண்டு அங்கே ராக்கெட்டுகளை வீச ஆரம்பித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்று பொதுமக்கள் தஞ்சமடைந்த தெற்கு காசாவை குறிவைத்து தாக்க ஆரம்பித்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in