அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 70,000 பேரை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள் - புதிய ஒப்பந்தம்!

அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 70,000 பேரை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள் - புதிய ஒப்பந்தம்!

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்தான ஃபெண்டானில் புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.

கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் ஃபெண்டானில் (fentanyl) போதை மருந்து காரணமாக 70,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சீனா நடவடிக்கை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா அதன் தடயவியல் அறிவியல் கழகத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரை ஃபெண்டானில் குறித்த பேச்சுக்களை நடத்த சீனா மறுத்து வந்தது.

தற்போது ஜோ பைடன் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோர் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக சந்தித்தித்துக் கொண்ட நிலையில் புதிய ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனா ஃபெண்டானில் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை முன்னெடுக்கும் என்றால், போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் பைடன் நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளதாக கூறி தேர்தலை சந்திக்கலாம் என்றே கூறப்படுகிறது.

ஜோ பைடன் - ஜி ஜின்பிங்
ஜோ பைடன் - ஜி ஜின்பிங்

மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஃபெண்டானில் மற்றும் ஃபெண்டானில் தொடர்பான பொருட்களை நேரடியாக அமெரிக்காவிற்கு கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 2018ல் சீன அரசாங்கம் ஃபெண்டானில் ஏற்றுமதிக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை அறிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in