இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளியானது சீனா... அமெரிக்காவை விஞ்சிய அதிசயம்

சீனா - அதிபர் ஜி ஜின்பிங்
சீனா - அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியாவின் பிரதான வர்த்தக பங்காளியாக சீனா மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்த வகையில் அமெரிக்காவை வீழ்த்தி சீனா விஸ்வரூபமெடுத்துள்ளது.

எல்லையில் சதா தொல்லை அளித்து வரும் சீனா, இந்தியாவின் அங்கமான அருணாசல பிரதேசம் மாநிலத்தில் கணிசமாக ஊடுருவி, ஆக்கிரமிப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைக்கு அப்பால் நாட்டின் உள்ளேயும் இன்னொரு திசையிலிருந்து ஊடுருவி இந்தியா முழுக்க தனது வர்த்தகப் பொருட்கள் வாயிலாக சீனா வியாப்பித்துள்ளது. வர்த்தக அடிப்படையில் இந்தியாவுடன் நெருங்கியிருந்த அமெரிக்காவை வீழ்த்திய சீனா, மிகப்பெரும் பங்காளியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்துக்கு அப்பாலும் இந்த மாற்றம் அரங்கேறி உள்ளது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேட்டிவ் அமைப்பின் அண்மை ஆய்வு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை விஞ்சி, இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா தனது நிலையை மீட்டெடுத்துள்ளது . நிறைவடைந்த நிதியாண்டில், சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 118.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராகவும் இருந்தது.

மாறாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் சிறிது சரிவை சந்தித்தது. இருவழி வர்த்தகம் இந்த வகையில் 118.3 பில்லியன் அமெரிக்க டாலராகி உள்ளது. இந்திய ஏற்றுமதி 1.32 சதவீதம் குறைந்து 77.5 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 20 சதவீதம் குறைந்து 40.8 பில்லியனாகவும் உள்ளது.

தொலைத்தொடர்பு, மருந்துப் பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்ற முக்கியமான துறைகளில் சீன இறக்குமதியை இந்தியா அதிகம் நம்பியிருப்பதால், சீனாவுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகள் அதிரடியாக வளர்ந்து வருகின்றன. இந்த வகையில் இந்தியா 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொலைத்தொடர்பு மற்றும் ஸ்மார்ட் போன் பாகங்களை இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த இறக்குமதியில் 44 சதவிகிதம் ஆகும். மேலும் சீனாவின் மடிக்கணினிகள் மற்றும் மேசைக் கணினிகள் இறக்குமதி மொத்தம் 3.8 பில்லியன் டாலர் என்றளவில், இந்தியவின் இறக்குமதியில் 77.7 சதவீதம் இடம்பிடித்துள்ளது.

ரஷ்யா - அமெரிக்கா - இந்தியா
ரஷ்யா - அமெரிக்கா - இந்தியா

மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிகளின் இந்திய இறக்குமதி, 2.2 பில்லியன் டாலர் மதிப்பில் முதன்மையாக சீனாவிலிருந்து வருகிறது. இதற்கான இறக்குமதியில் சீனாவின் பங்கு 75 சதவீதம் ஆகும். இது போக்குவரத்தை மின்மயமாக்குவதில் இந்தியாவின் முயற்சிக்கு சீனாவின் தவிர்க்க இயலாத பங்களிப்பை காட்டுகிறது.

சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுடனான வர்த்தகம் மிகவும் சீரான வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக ரஷ்யாவின் வர்த்தகப் புள்ளிவிவரங்கள் வியத்தகு அதிகரிப்பைக் கண்டுள்ளன, ஏற்றுமதிகள் 78.3% அதிகரித்து, இறக்குமதிகள் 952% உயர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாக விரிவடைந்துள்ளது. வர்த்தக அடிப்படையில் இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கி வருவது, அமெரிக்காவை சீண்டுவதாகவும் மாறி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in