பகீர்... மனைவியை அடித்துக் கொலை செய்த முன்னாள் அமைச்சர்: வெளியானது அதிர்ச்சி வீடியோ!

கஜகஸ்தான் முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவி சுல்தானட் நுகெனனோவா
கஜகஸ்தான் முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவி சுல்தானட் நுகெனனோவா

கஜகஸ்தானில் முன்னாள் அமைச்சர், தனது மனைவியை உணவகத்தில் 8 மணி நேரமாக தாக்குதல் செய்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்தவர் குவாண்டிக் பிஷிம்பாயேவ்(44). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அல்மாட்டியில் உள்ள உணவகத்தில் இவரது மனைவி சுல்தானட் நுகெனனோவா(31) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவாரமாக , தனக்கு இந்த மரணம் குறித்து எதுவும் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் பிஷிம்பாயேவ் போலீஸாரிடம் கூறினார்.

கஜகஸ்தான் முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவி சுல்தானட் நுகெனனோவா
கஜகஸ்தான் முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவி சுல்தானட் நுகெனனோவா

அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் போலீஸாருக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு எதிராக ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், தனது மனைவியை அடித்துக் கொலை செய்ததை குவாண்டிக் பிஷிம்பாயேவ் பின்பு ஒத்துக் கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுல்தானட் மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று கூறப்பட்டது. அத்துடன் தாக்குதலின் விளைவாக, அவரது நாசி எலும்புகளில் ஒன்று உடைந்தது மற்றும் அவரது முகம், தலை, கைகள் மற்றும் கைகளில் பல காயங்கள் இருந்ததும் கண்டுடிபிடிக்கப்பட்டது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, சுல்தானத் நுகெனோவா தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. தனது சகோதரி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை என்று சுல்தானத் சகோதரி, கஜகஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது பிஷிம்பாயேவ் தனது மனைவி சுல்தானட்டை தாக்கி இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அந்த வீடியோவில், பிஷிம்பாயேவ் தனது மனைவியை உணவகத்தில் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றதும் பதிவாகியுள்ளது. பிஷிம்பாயேவ் மற்றும் சுல்தானட் நாள் முழுவதையும் ஓட்டலில் கழித்ததாகவும் அதற்கு முந்தைய இரவு உணவகத்தில் மயக்கமடைந்த நிலையில் சுல்தானட் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும் முதல் சோதனை வழக்கு இதுவாகும் என்று மிரர் ஆன்லைன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், ஒரு ஜோசியரை அழைத்ததாகவும், அவர் தனது மனைவிக்கு எதுவும் நடந்திருக்காது என்று உறுதியளித்ததாகவும் அல் ஜசீரா கூறியுள்ளது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் வந்தது என்றும், ஆனால், சுல்தானட் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in