கரடிகளை இனி வேட்டையாடலாம்; மானியமும் உண்டு... அதிரடியாக அறிவித்தது ஜப்பான் அரசு!

கரடி
கரடி

ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.

கரடி
கரடி

அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படுமென ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன. அதேபோல் ''சுகினோவாகுமா'' எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன.

கரடி
கரடி

2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in