முன்னாள் காதலை இப்படியும் ’பழிவாங்கலாம்’; காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிக்கு பெயரிடும் விநோதம்

கரப்பான் பூச்சியும் முன்னாள் காதலும்
கரப்பான் பூச்சியும் முன்னாள் காதலும்

காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க விலங்குகள் சரணாலயம் ஒன்று, அங்குள்ள கரப்பான் பூச்சிக்கு முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை சூட்ட அனுமதிக்கிறது.

காதலர் தினத்துக்கான கவுண்டவுன் பிப்ரவரி பிறந்ததுமே தொடங்கிவிடும். நாளொரு சிறப்பு தினம் அதற்கான சிறப்பு பரிசுகள் என காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்கத் தயாராவார்கள். ஆனால் இழந்த காதலை கடந்து வந்தவர்களுக்கு, காதலர் தினம் முள்ளாக காத்திருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமெரிக்காவின் ப்ராங்க்ஸ் என்ற வனவிலங்கு சரணாலயம் வழி செய்திருக்கிறது.

இங்குள்ள பிரசித்தி பெற்ற கரப்பான் பூச்சிக்கு கட்டண அடிப்படையில் முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை சூட்டலாம். அதனை அந்த முன்னாள்களுக்கு தெரிவிக்கவும் செய்யலாம். ஒருவிதமான பழிவாங்கல், மனமாறல், அழுத்தத்திலிருந்து விடுபடல், கழிவிரக்கத்தை களைதல் உள்ளிட்டவைக்கு வாய்ப்பளிக்கும் உபாயமாகவும் இந்த உத்தி கவனம் பெற்றிருக்கிறது.

மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகள் - பெயரிட்டதற்கான சான்றிதழ்
மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகள் - பெயரிட்டதற்கான சான்றிதழ்

20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1246) செலுத்தி, முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை, கரப்பான் பூச்சிக்கு சூட்டும்போதும் பெரும் ஆறுதல் கிடைப்பதாக அனுபவஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். 2011-ல் இருந்து இந்த பாணியில் பெரும் வருமானத்தையும் ப்ராங்க்ஸ் சரணாலயம் ஈட்டி வருகிறது. வருமானத்தை தங்களுக்காக மட்டுமன்றி, உலகளவில் செயல்படும் நலிந்த விலங்கு சரணாலயங்களுக்கும் ப்ராங்க்ஸ் பகிர்ந்து தருகிறது.

மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகள், கிட்டத்தட்ட நான்கு அங்குல நீளத்தினாலான உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனமாகும். அந்த கரப்பான் பூச்சிக்கு தங்களது எக்ஸ் பெயரை சூட்டி அதற்கான வண்ணமயமான சான்றிதழையும் பெறலாம். அதனை வீட்டில் மாட்டி வைத்து மனம் ஆறவும் செய்யலாம்.

இதற்கான முன்பதிவினை காதலர் தினத்துக்கு வெகுமுன்பே ப்ராங்க்ஸ் சரணாலயத்தின் இணையதளம் தொடங்கி விடுகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைனில் பெயர் சூட்டலை ஆர்டர் செய்யலாம். தங்களுக்கான கரப்பானை தேர்ந்தெடுக்கவும் செய்யலாம்.

முன்னாள் காதலர்கள் மட்டமல்ல கசப்பான உறவில் தத்தளிக்கும் கணவன் - மனைவியரும் பரஸ்பரம் கரப்பானுக்கு பெயர் சூட்ட குவிகிறார்கள். இதுதவிர்த்து மாமியாரின் பெயரை சூட்டும் மருமகள்களும் ஆன்லைன் வாயிலாக அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனபோதும் காதலித்து மனம் நொந்த முன்னாள் காதலர்கள்தான் ,ப்ராங்க்ஸ் சரணாலயத்தை வாழ்வித்து வருகிறார்கள்.

ப்ராங்க்ஸ் சரணாலயத்து கரப்பான் பூச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து டொராண்டோ உள்ளிட்ட ஒருசில மிருககாட்சி சாலைகளும் இதே ’நேம் எ ரோச்’ பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in