+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!
Updated on
1 min read

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தப் பிறகு மாணவர்கள் எந்த கோர்ஸ் எடுத்துப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், ஸ்கார்ஷிப் விவரங்கள் என்று பல குழப்பங்கள் இருக்கலாம். அப்படி வழிகாட்டுதல் தேவைப்படும் பெற்றோர்கள், மாணவர்களுக்காக கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார் பல்வேறு தகவல்களை ‘காமதேனு’ டிஜிட்டலுக்காகப் பகிர்ந்துள்ளார்.

இந்த பேட்டியில், “சமீபத்திய சர்வேக்களின் படி 2.8% நகர்ப்புற மாணவர்களும், 1.8% கிராமப்புற மாணவர்கள் மட்டுமே தங்களுக்குப் பிடித்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர். மற்றவர்கள் பிறரைப் பார்த்து தான் முடிவு செய்கின்றனர். இப்படி இல்லாமல் தங்களுடைய தனித்திறனை கண்டுபிடித்து அதை வளர்த்துக் கொள்ளும்படியான படிப்புகளைத் தான் மாணவர்கள் படிக்க வேண்டும்.

இல்லை என்றால் என்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அதில் தங்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டாக்டர், இன்ஜினியர் என்று கெளரவத்திற்காக படிக்கக் கூடாது. பிடித்தப் பாடங்களில் கோர்ஸ் தேர்ந்தெடுத்துப் படிப்பது ஒருபக்கம் என்றால் நல்ல கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது இன்னும் முக்கியமான ஒன்று. குறிப்பாக, பொறியியல் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் டாப் 50 கல்லூரிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஏனெனில், அங்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் விரிவுரையாளராக இருப்பார்கள். லேப் வசதிகள், வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். பள்ளிகளில் முதல் க்ரூப் தவிர்த்து ப்யூர் சயின்ஸ், காமர்ஸ் போன்ற படிப்புகளைப் முடித்தவர்களுக்கு சட்டம், பிசினஸ் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

மாதிரி படம்..
மாதிரி படம்..

இதுகுறித்து இன்னும் தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ (https://portal.naanmudhalvan.tn.gov.in/login) என்ற வெப்சைட் உள்ளது. அதில் என்ன படிப்பு, அதற்கான துறைகள், கல்லூரி, வேலைவாய்ப்புகள் குறித்தான விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளலாம். மருத்துவம், பொறியியல் என உங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்ள வேண்டாம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   


ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in