பகீர்... 50 ஆண்களுக்கு எச்ஐவி பரப்பிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பகீர்... 50  ஆண்களுக்கு எச்ஐவி பரப்பிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

50 ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உறவின் மூலம் வேண்டுமென்றே எச்ஐவி பரவியதற்காக இளைஞர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்கரான அலெக்சாண்டர் லூயி என்ற 34 வயது இளைஞர் 15 வயதுடையவர்கள் உள்பட 30,50 வயதுடைய வெவ்வேறு வயது சிறுவர்கள் மற்றும் ஆண்களுடன் உறவு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தனக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரிந்திருந்தும் 50-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், எச்ஐவி பரவுவதற்காக வேண்டுமென்றே இதைச் செய்ததாகவும் அலெக்சாண்டர் லூயி கூறியுள்ளார்.

தற்போது குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15 வயது சிறுவனுடன் இணையத்தில் பாலியல் உரையாடலை அலெக்சாண்டர் ஆரம்பித்துள்ளார். ஆனால், உண்மையில் அவருடன் தொடர்பு கொண்டது சிறுவன் அல்ல, இரகசிய ஷெரிப்பின் துப்பறியும் நபர். அந்த சிறுவனுடன் உறவு கொள்ளும் நோக்கத்திற்காக சந்திப்பை அலெக்சாண்டர் ஏற்பாடு செய்த போது, கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். அப்போது தான் அவருக்கு எச்ஐவி இருப்பது தெரிய வந்தது.

அத்துடன் அத்துடன் அவர் வேண்டுமென்றே உறவு வைத்துக் கொண்டதும் தெரிய வந்தது. அத்துடன் எச்ஐவிக்காக அவர் மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மே 6-ம் தேதி 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உங்கள் நடத்தை வேட்டையாடும் ஒரு வெப்ஸ்டரின் வரையறையாக இருந்தது என்று அலெக்சாண்டர் லூயிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in