பரபரப்பு... ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கில் 3 பேர் கைது!

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு நிதி உதவி அளித்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரும், அந்நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வந்தவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் இந்தியா - கனடா இடையே ராஜீய ரீதியிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங் மற்றும் கோல்டி ப்ரார் ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக , ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (ஆர்சிஎம்பி) கமிஷனர் மைக்கேல் டுஹெம் கூறியுள்ளார். மேலும் அவர்களின் புகைப்படங்களையும் ஆர்சிஎம்பி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியர்கள் ஆவர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நன்கு அறிந்த இந்திய அதிகாரிகள் தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், போதைப்பொருள் வர்த்தகம், பாகிஸ்தான் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சிஎன்என்-நியூஸ்18 செய்தி நிறுவனத்துக்கு மேற்சொன்ன அதிகாரிகள் அளித்த தகவலில், "ஒரு பயங்கரவாத கும்பல் கனடாவில் இருந்துகொண்டு இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பால் குற்றம் சாட்டப்பட்ட பலர் அங்கு (கனடா) வசித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஐஎஸ்ஐ-யிடமிருந்து பணம் பெற்று வருகின்றனர்.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

அவ்வப்போது இதற்கான நாங்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளோம். ஆனால் அவர்கள் மீது கனடா அரசாங்கமோ அல்லது அவர்களின் காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை." என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (ஆர்சிஎம்பி) கமிஷனர் மைக்கேல் டுஹெம், “நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. தனித்துவமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு நிதி உதவி வழங்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in