30 நிமிடங்களில் வலியில்லாமல் சாகலாம்...வந்தாச்சு 'மிஸ்டர் டெத்' இயந்திரம்!

'மிஸ்டர் டெத்' இயந்திரம்
'மிஸ்டர் டெத்' இயந்திரம்
Updated on
2 min read

எந்தவிதமான வலியும் உடல் உபாதைகளும் இல்லாமல் ஹாயாக படுத்த நிலையில் அப்படியே தற்கொலை செய்து கொள்ளும் புதிய சாதனத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர். 

'மிஸ்டர் டெத்' இயந்திரம்
'மிஸ்டர் டெத்' இயந்திரம்

வாழ்க்கையில் மீள முடியாத அளவிற்கு தாங்கள் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டதாக கருதுபவர்களும்,  குடும்பம், உறவுகள், தொழில், அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறவர்களும்  தற்கொலை எனும் துயர முடிவை தேடிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலும் விஷம் அருந்தியும்,  தூக்கிட்டும், துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது,  ரயில், பேருந்து, ஆறு, குளங்கள் ஆகியவற்றில் பாய்ந்தும்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு நிமிடத்தில் அவர்கள் அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாலும் அந்த நேரத்தில் அவர்கள் படுகிற பாடு மிகவும் கொடூரமானது.

தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை மனநிலையில் இருப்பவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளித்தும்  தற்கொலைக்கு எதிரான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் ,தற்கொலை செய்து கொள்பவர்களை தடுத்து விட முடிவதில்லை.

உலகின் சில நாடுகளில் கருணைக் கொலை மற்றும் தற்கொலை ஆகியவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி  சுவிட்சர்லாந்து  நாட்டில் தற்கொலை செய்து கொள்வது அங்கீகரிக்கப் பட்டுள்ளது. எனவே, அங்கு  வலியில்லாமல் தற்கொலை செய்வதற்கு நவீன இயந்திரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் 'மிஸ்டர் டெத்' என்ற வலியில்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்து அதற்கு அந்த நாட்டு அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளது. தற்கொலை மற்றும் கருணைக்கொலை செய்ய விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தை வாங்கி அதற்குள் படுத்தால் போதும். 30 நிமிடங்களில் வலியில்லாமல் மரணம் சம்பவிக்கும் என 'மிஸ்டர் டெத்' இயந்திரத்தைக் கண்டுபிடித்த எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவிக்கிறது. 

'மிஸ்டர் டெத்' இயந்திரம்
'மிஸ்டர் டெத்' இயந்திரம்

தற்கொலை செய்து கொள்ளும் நபர் இந்த இயந்திரத்தில் படுத்துக் கொண்டால் இயந்திரம் அவர் ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவை குறைத்து நைட்ரஜன் வாயுவை அதிக அளவில் சுவாசிக்கச் செய்யும். இதன் மூலம் அந்த நபர் சுயநினைவை இழந்து விடுவார். இதனைத்தொடர்ந்து சில வினாடிகளில் அவரது உயிர் பிரியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த மிஸ்டர் டெத் இயந்திரம் எளிதாக எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரத்தையே சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து நாட்டில் ஆதரவு இருந்தாலும், இந்த இயந்திரத்திற்கு எதிர்ப்பும் நிலவி வருகிறது. இது போன்ற இயந்திரங்களால் சிறு பிரச்சனைகளுக்கும் உயிரை எளிதாக மாய்த்து விடலாம் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!

திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in