ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!

அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை
அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை
Updated on
2 min read

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட அயோத்தி நகர் முழுவதும் 28 மொழிகளில் பெயர்ப் பலகைகள்  வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில், ராமர் கோயில் என்பதற்குப் பதிலாக ராம் கி பாடி என எழுதப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

ராமர் கோயில்
ராமர் கோயில்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என எட்டாயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சாதாரண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும்  கும்பாபிஷேகம் முடிந்த பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் உத்தரப்பிரதேச மாநில அரசால் செய்து தரப்பட்டுள்ளது.  இதற்காக அயோத்தி ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.  விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு விமானப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை
அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை

இந்த நிலையில் அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்கு தெளிவாக வழிகாட்டும் வகையில் அயோத்தி நகரில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெயர் பலகையில் இந்திய மொழிகள் 22-ம்,  வெளிநாட்டு மொழிகள் 6-ம்  இடம் பெற்றுள்ளன. 

இந்த வழிகாட்டி பலகையில் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, டோக்ரி என 22 இந்திய மொழிகளிலும், அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உட்பட 6 வெளிநாட்டு மொழிகளிலும் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பெயர் பலகையில், தமிழில், ராமர் கோயில் என எழுதுவதற்குப் பதிலாக 'ராம் கி பாடி' என எழுதப்பட்டுள்ளது. அதாவது, இந்தியில் ராமர் கோயில் என்பதே இதன் அர்த்தமாகும். இதை தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in