அதிர்ச்சி... பேருந்தில் சென்ற 9 பேர் கடத்தி சுட்டுக் கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்!

பலூச்சிஸ்தானில் மர்ம நபர்களால் 9 பேர் சுட்டுக்கொலை
பலூச்சிஸ்தானில் மர்ம நபர்களால் 9 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூச்சிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணித்த 9 பேரை, மர்ம கும்பல் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டிய தென்மேற்கு பாகிஸ்தானின் பதற்றமான மாகாணம் பலூச்சிஸ்தான். இந்த பிராந்தியத்தில் நேற்று இரவு, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் குழு, ஒரு பேருந்தை வழி மறித்து, அதில் பயணித்த 9 பேரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாலூச்சிஸ்தான் பிராந்தியத்தை சேரந்த போலீஸ் அதிகாரி அப்துல்லா மெங்கல், “நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு குழு ஈரானுக்குச் சென்ற ஒரு பேருந்தை இடைமறித்து, 9 பேரை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றது.

மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தப்தானுக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறினார்.

மாவட்ட துணை கமிஷனர் ஹபீபுல்லா முசாகைல் கூறுகையில், “கடத்தல் சம்பவம் நடைபெற்ற ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு, ஒரு பாலத்தின் அடியில் அனைவரின் உடல்களும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் மீட்கப்பட்டன" என்றார்.

கனிம வளங்கள் நிறைந்த இந்த பிராந்தியத்தில் பலூச் போராளிக் குழுக்கள், பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. இதேபோன்ற கொலைகளுக்கு பலூச் போராளி குழுவினர் முன்பு பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பலூச்சிஸ்தான் பிராந்தியம் (சிவப்பு நிற பகுதி)
பலூச்சிஸ்தான் பிராந்தியம் (சிவப்பு நிற பகுதி)

அப்பிராந்தியத்தில் அண்டை நாடான சீனாவால் குவாதர் கடல் துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலூச் போராளிக்குழுவினர் சீனா நாட்டினரையும், அவர்களின் நலன்களையும் குறிவைத்துள்ளனர்.சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கீழ், அந்த பிராந்தியத்தில் 65 பில்லியன் டாலர் உறுதிப்பாட்டின் கீழ் சீனா அதிக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

"தம்பி அண்ணாமலை... பார்த்து நடந்துக்க... ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா..." பகிங்கிரமாக எச்சரித்த பழனிசாமி!

தடுப்புகளைத் தாண்டி  இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in