அதிர்ச்சி சம்பவம்... 12 வயது சிறுமியை விழா எடுத்து மணந்த 63 வயது சாமியார்

63 வயது சாமியார் - 12 வயது சிறுமி திருமணம்
63 வயது சாமியார் - 12 வயது சிறுமி திருமணம்

கானா தேசத்தில் 63 வயது சாமியார் ஒருவர் 12 வயது சிறுமியை விமரிசையாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலகம் முழுக்க கண்டனத்தை பெற்று வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவின் கானா தேசத்தில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது. 63 வயது சாமியார் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் திருமணம் செய்திருக்கிறார். அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக சாமியார் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.

குறிப்பிட்ட பிரிவின் மதவழிபாட்டுத் தலைவராக 63 வயதாகும் Nuumo Borketey Laweh Tsuru என்பவர் விளங்குகிறார். இவர் 2 தினங்களுக்கு முன்னர்(ஏப்ரல் 30) கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயதாகும் சிறுமியை தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் பகிரங்கமாக மணந்திருக்கிறார். உள்ளூர் செய்திச் சேனலான ’அப்லேட்’ தனது சமூக ஊடக செய்திகளில் இந்த திருமணத்தின் விரிவான நிகழ்வின் காட்சிகள், திருமணத்தைக் காண திரண்ட பிரமுகர்கள் உள்ளிட்டோரை பகிர்ந்துள்ளது. அந்த விழாவில், உள்ளூர் மொழியில் உரையாடும் பெண்கள், முதியவரை மணம் முடிக்கும் சிறுமியை வழக்கமான மணமகளுக்கான சீண்டலாக கிண்டல் செய்கின்றனர்.

திருமண விழாவின் புகைப்படங்கள் வெளியானதில் கானா தேசத்திலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அங்கே மணமகளின் குறைந்தபட்ச வயது 18. சட்டப்படி குழந்தை திருமணம் என்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சாமியார் மற்றும் அவரது சமூகம் தொடர்பான சடங்கு விழா என்பதால் அரசு உடனடியாக தலையிடவில்லை. போலீஸார் தரப்பில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்பதோடு முடித்துக்கொண்டனர்.

மணவிழாவுக்கான சடங்குகள்
மணவிழாவுக்கான சடங்குகள்

கானாவுக்கு வெளியேயும் கண்டனங்கள் அதிகரித்ததில், சாமியாருக்கு ஆதரவாக உள்ளூர் சமூகத் தலைவர்கள் கிளம்பியிருக்கின்றனர். தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய புரிதல் இல்லை என வெளியுல கண்டனங்களை புறந்தள்ளுகின்றனர்.

குறிப்பாக சாமியாரின் மனைவியாவதற்காக சிறுமியின் 6 வயது முதலே அவரை தயார்படுத்தி வந்ததும், அதற்காக விநோதமான சடங்குகளுக்கு அவர் ஆளானதும் தற்போது வெளிப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, சாமியாரின் சமூகத்தை சேர்ந்தோர், சிறுமியின் கல்வி தொடரும் என்று அறிவித்திருக்கின்றனர். பகிரங்க குழந்தை திருமணத்துக்கு எதிராகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கானா அரசுக்கு எதிராகவும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in