பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்... 10 போலீஸார் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று அதிகாலை காவல் நிலையம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானி தலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே 2022-ம் ஆண்டு முதல் மோதல்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய போராளிகள், போலீஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் டிராபன் பிராந்தியத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது பயங்கரவாத குழுவினர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து டிராபன் துணை போலீஸ் சூப்பிரண்டு மாலிக் அனீஸ் உல் ஹசன் கூறுகையில், “பயங்கரவாதிகள் முதலில் கான்ஸ்டபிள்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் காவல் நிலையத்துக்குள் நுழைந்ததும், திடீரென கையெறி குண்டுகளைப் வீசினர். இந்தத் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

போலீஸார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
போலீஸார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

டிராபன் பிராந்திய காவல் நிலைய தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும், 6 போலீஸார் படுகாயமடைந்துள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பரில் வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாமுக்குள், 6 பேர் கொண்ட தற்கொலைப் படையினர் வெடிபொருட்கள் நிறைந்த டிரக்கை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் அந்நாட்டில் அண்மைக்காலமாக இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in