இனி, ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்... 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு
Updated on
2 min read

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. 

மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிபிஎஸ்இ - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
சிபிஎஸ்இ - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்  இன்று இது குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு தரப்பினர் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எப்படி எழுதுவது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனாலும் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in