இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்

இன்று டிசம்பர் 20ம் தேதி மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான். சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதலே குவிய துவங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக இன்று டிசம்பர் 20ம் தேதி காலை 6 மணி முதல் நாளை டிசம்பர் 21ம் தேதி காலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை இலவச பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சனிபகவானுக்குரிய இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெறும் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகை பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பிடியிலிருந்து விடுவித்து, மீண்டும் வளமான வாழ்க்கையை அளித்ததால் நள்ளாறு என்றழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், சுயம்புவாக தர்ப்பை வனத்தில் தோன்றியதால் ஈசன் இன்றும் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இந்த தலத்தில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவான்

இன்றைய சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதே குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைக்கால் பகுதியில் இருந்து இன்று காலை 6 மணி முதல் நாளை டிசம்பர் 21ம் தேதி காலை 6 மணி வரை இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,500 போலீஸார் உட்பட 2,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்

விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கலக்கல் வீடியோ... விஜய் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட தேவதர்ஷினி!

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... சிறப்பு ஏற்பாடுகள் தயார்!

ஷாக்... தேநீர் கொண்டு வர தாமதம்: மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கொடூர கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in