திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... சிறப்பு ஏற்பாடுகள் தயார்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்
Updated on
2 min read

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு சனிப்பெயர்சி விழா
திருநள்ளாறு சனிப்பெயர்சி விழா

கரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சனீஸ்வரனுக்கு உரிய இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

திருநள்ளாறு சனிப்பெயர்சி விழா
திருநள்ளாறு சனிப்பெயர்சி விழா

இந்த விழாவிற்கு புதுவை, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக 20ம் தேதி காலை 6 மணிமுதல் 21ம் தேதி காலை 6 மணி வரை இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை ஆலோசனை
காவல் துறை ஆலோசனை

இந்த பஸ்கள் காரைக்கால் பேருந்து நிலையம், காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை வாகன நிறுத்துமிடம், காரைக்கால் ரயில் நிலையம், வேளாண் கல்லூரி வாகன நிறுத்துமிடம், வி.ஐ.பி. நகர் வாகன நிறுத்துமிடம், இந்திர பிரஸ்தா நகர், வாகன நிறுத்துமிடம் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 26 பேருந்துகள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மாற்றுதிறனாளி பக்தர்களுக்காக இரண்டு எலெக்ட்ரிக் ஆட்டோக்களும் இயக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு பணிக்காக 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருநள்ளாறு கோயில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?

ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!

111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in