மனைவியின் நினைவிடத்தில் கோயில் கட்டிய கணவன்... ஊரே திரண்டு வழிபாடு நடத்திய நெகிழ்ச்சி சம்பவம்!

மறைந்த மனைவிக்கு கோயில் எழுப்பிய கணவன்
மறைந்த மனைவிக்கு கோயில் எழுப்பிய கணவன்

அரியலூரில் மறைந்த மனைவியின் நினைவிடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், பத்தாண்டுகளாக குழந்தை இல்லாமல் இந்த தம்பதி தவித்து வந்தனர். பின்னர் பிறந்த மகனுக்கு கோமகன் என பெயரிட்டு உள்ளனர். தற்போது கோமகனுக்கு 5 வயது ஆகிறது.

மகன் கோமகனுடன் கோபாலகிருஷ்ணன்
மகன் கோமகனுடன் கோபாலகிருஷ்ணன்

இந்த நிலையில் கடந்தாண்டு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது கற்பகவல்லிக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து மனைவிக்கு, கோபாலகிருஷ்ணன் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி கற்பகவல்லி காலமானார்.

இதையடுத்து தனது வீட்டின் அருகிலேயே கற்பகவல்லியை அடக்கம் செய்து சமாதி எழுப்பி இருந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தபோது, மனைவி கற்பகவல்லியிடம் அவர் உயிரிழந்தாலும், கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவேன் என கோபாலகிருஷ்ணன் சத்தியம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

கோயிலில் வழிபாடு நடத்திய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்
கோயிலில் வழிபாடு நடத்திய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்

அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பகவல்லி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே, கோயில் ஒன்றை கோபாலகிருஷ்ணன் கட்டினார். அந்த கோயிலில் கற்பகவல்லியை போன்ற சிலை ஒன்றை அமைத்து, அம்மனாக பாவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கற்பகவல்லி இறந்த ஓராண்டுக்குள் அவருக்கு கோயில் எழுப்புவேன் என கோபாலகிருஷ்ணன் கூறியிருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் இன்று கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இது குறித்த தகவல் பரவியதும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டு, கோயிலில் வழிபாடு நடத்தினர். மனைவியிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கோயில் கட்டிய கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in