நிலையான வாழ்வு பெற ‘ஷட்திலா ஏகாதசி’ அன்று மறக்காம இதை பண்ணுங்க!

நிலையான வாழ்வு பெற ‘ஷட்திலா ஏகாதசி’ அன்று மறக்காம இதை பண்ணுங்க!

மாசி மாத தேய்பிறையில் வருகிற ஏகாதசியை ஷட்திலா ஏகாதசி என்கிறோம். அன்றைய தினத்தில் அன்னதானம் செய்பவர்கள் பூலோகம் விட்டு மேலோகம் சென்றாலும் பசிப்பிணி இல்லா நிலையை பெறுவர். நீங்கள் அளிக்கும் அன்னதானம் பசியோடு இருக்கிற ஒருவருக்கு உதவியாக இருந்தாலும் நிலையான வாழ்வைப் பெறுவீர்கள் என்கிறது இந்துமதம்.

இந்த நாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் தவறாமல் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று திருமாலை தரிசித்து, அதன் பின்னர் பசியோடு இருக்கிற ஒருவருக்காவது அன்னாதானம் செய்யுங்கள்.

அன்னதானம்
அன்னதானம்

அன்றைய தினம் ‘ஓம் நமோ நாராயணா’ என்கிற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாலே, உங்கள் பாவங்கள் அனைத்தும் கரைய துவங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக ஏகாதசி தினத்தில் விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது நற்பலனைத் தரும் என்றாலும் ஷட்திலா ஏகாதசி திதியன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வாழ்வு சிறக்க வழிவகுக்கும். முன் ஜென்ம பாவங்கள் விலகும். அன்றைய தினம் உங்களால் இயன்றளவு அன்னதானம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்தால், காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.

மகாவிஷ்ணுவை வழிபடும் போது, துளசி மாலை சார்த்தி வழிபட்டு, துளசி தீர்த்தம் பருகுங்கள். உடலாலும் மனதாலும் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் விலகி வாழ்வு சிறக்கும்.

இதையும் வாசிக்கலாமே...


'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in