450 கிராம் தங்கம், ரூ.65.44 லட்சம்... காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை!

காஞ்சி காமாட்சியம்மன்
காஞ்சி காமாட்சியம்மன்

புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியலில்  65.44 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.  உள்ளூர்,வெளியூர் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயில் வாளகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். 

காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மன்

அதன்படி, கோயிலில் உள்ள 2 நிரந்தர உண்டியல்களை  திறந்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 65 லட்சத்து 44 ஆயிரத்து 579 ரூபாயும், 450 கிராம் தங்கம் மற்றும் 250 கிராம் வெள்ளியும்  காணிக்கையாக பெறப்பட்டதாக அதிகாரிகளால்  தெரிவிக்கப்பட்டது. 

கோப்பு படம்
கோப்பு படம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in