பகீர்... இளைஞர் குத்திக் கொலை; தங்கையை காதலித்ததால் அண்ணன் வெறிச்செயல்!

கொலையான முரளி
கொலையான முரளி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன் முரளி ( 22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டு முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் முரளி மீண்டும் அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பலமுறை பெண்ணின் அண்ணன் சந்தோஷ், முரளியை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும், காதல் மயக்கத்தில் சுற்றி வந்த முரளி தொடர்ந்து சிறுமியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ், முரளியுடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலில், சந்தோஷ், முரளியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முரளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சந்தோஷை தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in