ரீல்ஸ் எடுப்பதற்காக உயிரை விட்ட இளைஞர்... 150 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்ததால் விபரீதம்!

தினேஷ் மீனா உடலை தேடும் போலீஸார்.
தினேஷ் மீனா உடலை தேடும் போலீஸார்.
Updated on
2 min read

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக 150 அடி உயரத்தில் இருந்து ஆழமான ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையடக்க உலகமான செல்போன் சாதனம் இல்லாத நபரில்லை என்ற நிலை வந்து விட்டது. உலகிலேயே அதிக செல்போன் பயன்டுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. தகவல் தொடர்பு சாதனமான செல்போன் இன்று படம், வீடியோ, உணவினை ஆர்டர் செய்ய என பல விஷயங்களுக்குப் பயன்படுகிறது. அத்துடன் பள்ளி, கல்லூரி பாடங்களை கற்கவும் உதவுகிறது. கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது செல்போன்கள் தான்.

அப்படிப்பட்ட செல்போன்களைக் கொண்டு சிலர் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. செல்போன் மூலம் ரீல்ஸ் தயாரித்து அதை சமூக வலைதளங்களில் பரப்புவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு லைக்ஸ் வாங்குவதற்காக அபாயகரமான இடங்களில் நின்று ரீல்ஸ் எடுப்பது, பேருந்து, ரயில்களில் இருந்து குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

அப்படியொரு சம்பவம் தான், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த தினேஷ் மீனா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கல்குவாரியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுக்க தினேஷ் மீனா முடிவு செய்தார். இதற்காக 150 அடி உயர கல்குவாரியில் இருந்து ஏரிக்குள் தினேஷ் குதித்துள்ளார். இதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

தினேஷ் மீனா உடலை தேடும் போலீஸார்.
தினேஷ் மீனா உடலை தேடும் போலீஸார்.

ஏரியில் குதித்த தினேஷ் நீண்ட நேரமாகியும், வெளியே வராததால், அவரது நண்பர்கள் ஏரியில் குதித்து தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் டைவர்ஸ் விரைந்து வந்து மூன்று மணி நேரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஆனால், உயிரற்ற மீனாவின் உடலைத்தான் அவர்களால் மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எம்.பி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

ஜாரக்கண்ட் மாநிலத்தில் ஏரியில் குதித்து உயிரிழந்த தஜிப்.
ஜாரக்கண்ட் மாநிலத்தில் ஏரியில் குதித்து உயிரிழந்த தஜிப்.

ஜார்க்கண்ட் மாநிலம், சாகிப்கஞ்ச் மாவட்டம் ஜிர்வபரி பகுதியைச் சேர்ந்த தஜிப் என்ற 18 வயது இளைஞர் ரீல்ஸ் எடுப்பதற்காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்து உயிரிழந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in