‘சிக்கன் ஷவர்மா’ ருசித்த 19 வயது இளைஞர் மரணம்... கடைக்காரர்கள் இருவர் கைது!

தயாராகும் சிக்கன் ஷவர்மா
தயாராகும் சிக்கன் ஷவர்மா

மும்பையில் உள்ள ஷவர்மா கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா விரும்பிக்கேட்டு ருசித்த 19 வயது இளைஞர், வயிற்று வலியுடன் சில தினங்கள் போராடி கடைசியில் இறந்துள்ளார்.

மும்பையில் 19 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக, ஷவர்மா விற்பனையாளர்களான ஆனந்த் காம்ப்ளே மற்றும் அகமது ஷேக் ஆகியோரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். பலியான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கடந்த வாரம் டிராம்பே பகுதியில் உள்ள கடையில் 'சிக்கன் ஷவர்மா' ருசித்ததே அவர் இறந்ததற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சிக்கன் ஷவர்மா
சிக்கன் ஷவர்மா

ஷவர்மாவை சாப்பிட்ட பிறகு போக்ஸே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். உடனே அவரது குடும்பத்தினர் போக்ஸேவை அருகில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செய்தனர். ஆனபோதும் போக்ஸே உடல்நிலை தேறாது இருந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த மருத்துவமனை டாக்டர்கள் போக்ஸேக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், போக்ஸே தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு ஆளானதில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நலம் திரும்பாது போக்சே மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் 336 மற்றும் 273 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவுக்கும், இருவர் கைதுக்கும் வழிவகுத்தது.

கைது
கைது

இதற்கிடையே, மும்பையின் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில், உணவில் விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

"12 பேர் ஃபுட் பாய்சன் புகாரின் கீழ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேர் சிகிச்சையில் உள்ளனர்" என்று பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in