நிர்வாண புகைப்படங்களைக் காட்டி இளம்பெண்களை வேட்டையாடிய இளைஞர்: தாய், உறவினர் உடந்தை!

கைது செய்யப்பட்ட அர்ஜுன்
கைது செய்யப்பட்ட அர்ஜுன்
Updated on
2 min read

இளம்பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் போலீஸார் கைதுக்கு பயந்து எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை குறிவைத்து காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைக் காட்டி அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

காதல்
காதல்

இந்த நிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குந்தாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிரட்டல், இளம்பெண்களை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அர்ஜூனை கைது செய்ய போலீஸார் நேற்று சென்றனர்.

அப்போது அவர் திடீரென கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தார். ஆனால், போலீஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்திரா, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் எலி மருந்தை சாப்பிட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், ஹூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று போலீஸாரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அர்ஜுன் மீது ஷிர்சி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனுக்கு அவரது தாய் நாகவேணி உதவியுள்ளார். தன்னை நம்பும் பல பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அர்ஜுன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவரின் பாலியல் நடவடிக்கைக்கு பாலச்சந்திர கவுடா என்ற அவரது உறவினர் ஆதரவு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சில பெண்களிடம் நாகவேணி பணம் வசூலித்துள்ளதும் தெரிய வந்துள்ளார். தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

காதல் என்ற பெயரில் பழகிய பெண்களுடன் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்து பாலியல் பலாத்கார வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in