சவுக்கு சங்கரின் வாகனம் மீது துடைப்பத்தை வீசிய பெண்கள்... மதுரை நீதிமன்றத்தில் பரபரப்பு!

மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்
மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, பெண்கள் துடைப்பத்தை வீசி எறிந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின்போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர்.

அந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் HR Ferncrystal

நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் எனக்கூறி மதுரை சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வரும் மே 22 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டம்
சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டம் HR Ferncrystal

சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயிலில் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனம் மீது துடைப்பங்களை வீசி எறிந்து கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in