கேரளாவில் பரபரப்பு... குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை- அச்சத்தில் மக்கள்

கேரளாவின் உலிக்கல் நகரில் புகுந்த காட்டு யானை
கேரளாவின் உலிக்கல் நகரில் புகுந்த காட்டு யானைBG

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் உலிக்கல் நகரத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் கர்நாடக மாநில எல்லையில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் உலிக்கல் நகரில் இன்று காலை வழக்கமான பணிகளுக்காக பொதுமக்கள் வெளியே வந்த போது குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். யானையின் நடமாட்டத்தை பொறுத்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புகளுக்கு இடையே சுற்றித்திரியும் காட்டுயானை
குடியிருப்புகளுக்கு இடையே சுற்றித்திரியும் காட்டுயானை

இதனிடையே வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உலிக்கல் நகருக்கு காட்டு யானை எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக ஐயப்பாடு எழுந்துள்ளது. யானைக் கூட்டத்திலிருந்து வெளியேறிய அல்லது பிரிந்த ஒற்றை யானை வழி தவறி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. வனப்பகுதி நீண்ட தூரம் இருப்பதால் யானையை விரட்டுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் உலிக்கல் நகர மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in