தகாத உறவால் கொடூரம்... கணவரை கொலை செய்த மூன்று குழந்தைகளின் தாய்: காதலனும் கைது!

கைது செய்யப்பட்ட ரியாஸ் அகமது, மஞ்சுளா
கைது செய்யப்பட்ட ரியாஸ் அகமது, மஞ்சுளா

தகாத உறவால் மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர், தன் காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொலை செய்து உடலை சாலையில் வீசிய சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள ஏபிஎம்சி மரடகி சாலையில் ஜனவரி 10-ம் தேதி அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்த அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அது பஞ்சாரா காலனியைச் சேர்ந்த சந்திரசேகர லமணி(40) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட சந்திரசேகர லமணி மற்றும் குழந்தைகளுடன் மஞ்சுளா
கொலை செய்யப்பட்ட சந்திரசேகர லமணி மற்றும் குழந்தைகளுடன் மஞ்சுளா

சந்திரசேகர லமணி கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டு விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட லமணிக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த கொலையில் துப்பு கிடைக்ககாமல் போலீஸார் தவித்து வந்தனர். இந்த நிலையில், லமணியின் மனைவி மஞ்சுளா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் நடவடிக்கையை கண்காணிக்க ஆரம்பித்தனர். அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதனால் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. திருமணம் முடிந்த பின் மஞ்சுளா, ரியாஸ் அகமது என்பவருடன் தகாத உறவு கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியது, மஞ்சுளாவின் கணவர் சந்திரசேகர லமணிக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மனைவியைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் அவரை கொலை செய்ய மஞ்சுளாவும், ரியாஸ் அகமதுவும் முடிவு செய்தனர். ஜனவரி 10-ம் தேதி அவரை அடித்துக் கொலை செய்து உடலை ஏபிஎம்சி மரடகி சாலையில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மஞ்சுளா, ரியாஸ் அகமது ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று குழந்தைகளின் தாய், தகாத உறவால் காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in