ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன?... தென்மண்டல ஐஜி ஷாக் தகவல்!

தென்மண்டல ஐஜி கண்ணன்
தென்மண்டல ஐஜி கண்ணன்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கில், முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இது கொலையா? தற்கொலையா? என எதனையும் உறுதி செய்ய முடியவில்லை. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததாகவும், இறந்த உடலை எரித்ததாகவும் எந்த தகவலும் இல்லை என தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக அளிக்க வந்தபோது 2 கடிதங்களை அவரது குடும்பத்தினர் கொடுத்தனர். 2 கடிதங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாகவும், அரசியல் விவகாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கடிதத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் மரண வாக்குமூலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்

இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் 4-ம் தேதி காலை ஜெயக்குமார் வீடு அருகே அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. உடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது. உடல் கருகி நிலையில் இருந்தது. பின்னங்கால் முழுதும் எரியாத நிலையில் இருந்தது. பின்பகுதி எதுவும் எரியாமல் இருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.

கிடைத்த தகவல் மற்றும் தடயங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த வழக்கிலும் இல்லாதது போல் புலனாய்வு நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இதுவரை கிடைக்கப் பெறவில்லை. முதற்கட்ட ஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது. ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் தடைய அறிவியல் துறை கைரேகை நிபுணர் குழு என பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் சோதனைகளும் இந்த வழக்கில் நடந்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

விசாரணை முழுமை பெறவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த தகவலை வைத்து கொலையா? தற்கொலையா? என எதனையும் உறுதி செய்ய முடியவில்லை.

முதற்கட்ட பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததாகவும், இறந்த உடலை எரித்ததாகவும் எந்த தகவலும் இல்லை. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தை அறிவியல் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை உட்பட பல்வேறு அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளது. ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என பல உள்ளன.

குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சபாநாயகர் பெயரும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவுபெறும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in