ரயில்வேயில் 300 பேரிடம் வேலை வழங்குவதாக 21,00,00,000 மோசடி... கையும், களவுமாக சிக்கிய குற்றவாளி!

ரயில்வேயில் வேலை வாய்ப்பு மோசடி
ரயில்வேயில் வேலை வாய்ப்பு மோசடி

மேற்கு ரயில்வேயில் 300 பேருக்கு வேலை வழங்குவதாக கூறி, ரூ.21 கோடி வசூலித்த மோசடி நபரை ரயில்வே கண்காணிப்பு குழுவினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

மேற்கு ரயில்வேயில் வேலை வழங்குவதாகக் கூறி, ஒரு நபர் விளம்பரங்களை வெளியிட்டு 300 பேரிடம் 21 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளார். இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் கண்காணிப்புக் குழுவுக்கு புகார்கள் சென்றன.

வேலை மோசடி
வேலை மோசடி

இதையடுத்து இந்தக் குழு கடந்த 3 மாதங்களாக வேலை மோசடி குறித்து விசாரித்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் சுமித் தாக்கூர் கூறியதாவது: வேலை தேடுபவர்கள் போன்று சிலரை ஏற்பாடு செய்து, குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை பொறி வைத்து பிடித்தோம். முதலில் 'கூகுள் பே' மூலம் குற்றவாளிக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பினோம்.

மேலும் அடுத்த தவணை பணத்தை கொடுப்பதாக கூறி மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு குற்றவாளியை வரவழைத்தோம். திட்டமிட்டபடி, கடந்த 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு பணத்தை பெறுவதற்கு வந்தபோது ரயில்வே கண்காணிப்பு குழு மூலம் அவர் பிடிபட்டார்.

பிடிபட்ட நபரின் ஸ்மார்ட்போனில் மொத்தம் 180 பிளாக் செய்யப்பட்ட எண்கள் காணப்பட்டன. அநேகமாக அவர்கள் தான் ரயில்வேயில் வேலை பெறுவதற்கு பெரும் தொகையை வழங்கியவர்களாக இருப்பர். மொத்தம் 300 பேரிடம் ரூ.21 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் ரூ.5 முதல் 8 லட்சம் வரையிலான பணத்தை திரும்ப கோரி சுமார் 120 தகவல் தொடர்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ரயில்வேயில் வேலைக்கான விளம்பரங்கள், போலி ஆவணங்கள், வேலையில் சேர்ந்த ஊழியர்கள் பேசுவது போன்ற வீடியோக்கள் ஆகிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து மும்பை சென்ட்ரல் ரிசர்வ் போலீஸாரிடம் குற்றவாளி ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in