சுவர் இடிந்து 7 பேர் பலியான சம்பவம்; கட்டிட உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

சுவர் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த கொட்டகை
சுவர் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த கொட்டகை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கன மழையின்போது மதில் சுவர் இடிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டம், பாச்சுபள்ளியில் உள்ளது ரேணுகா எல்லம்மா கோயில் காலனி.

இப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கனமழை பெய்தது. அப்போது இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சரிந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் மற்றும் 4 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர்.

போலீஸார் தகவல் படி 30 முதல் 40 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதில் உயிரிழந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.

மதில் சுவரை தாங்கி நின்ற 6 அடி அகல மண் தடுப்பு மழையில் கரைந்ததைத் தொடர்ந்து, சுவர் இடிந்து தற்காலிக கொட்டகை மீது விழுந்தது.

விடிய விடிய நடந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து நேற்று காலை 7 தொழிலாளர்களின் சடலங்களை போலீஸார் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராம் யாதவ் (44), கீதா பாய் (40), ஹிமான்ஷு (4), ஷங்கர் கவுட் (18), ஸ்ரீபதி மகேஜி (23), பிந்த்ரேஷ் பவானி சவுகான் (30), குஷி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுவர் இடிந்து தொழிலாளர்கள் உயிரிழப்பு
சுவர் இடிந்து தொழிலாளர்கள் உயிரிழப்பு

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் அரவிந்த் ரெட்டி, சைட் என்ஜினீயர் சதீஷ், திட்ட மேலாளர் பிரான்சிஸ், ஒப்பந்ததாரர் ராஜேஷ், மேலும் இருவரை சைபராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுவர் இடிந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in