மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்
கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்
Updated on
2 min read

விக்கிரவாண்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்
கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது ரெட்டணை கிராமம். இங்கு தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் அளித்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்திருந்தார்.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர். அதில், கார்த்திகேயன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கார்த்திகேயன் மீதான வழக்கை போலீஸார், போக்சோ வழக்காக மாற்றினர். இந்நிலையில், கார்த்திகேயன் தலைமறைவானார். அவரை வலைவீசித் தேடி வந்த போலீஸார், இன்று காலை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் பள்ளியில் பயிலும் வேறு மாணவிகள் யாருக்கேனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in