பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்: வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

நாக்பூரில் வீடியோவில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்
நாக்பூரில் வீடியோவில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது மாணவியை ஆட்டோவில் வைத்து அதன் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பள்ளிக் குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பலியாகி வருவது அதிகரித்து வருகிறது. அறிமுகம் இல்லாதவர்களை விட, நன்கு அறிமுகமானவர்களால் சிறு குழந்தைகள் பலியாகும் சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஓம்கார் நகர் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, ​​ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, பின்னால் அமர்ந்திருந்த மாணவியை ஓட்டுநர் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். மாணவியிடம் அவர் தவறாக நடந்து கொண்ட இந்த அதிர்ச்சி சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரவிய சில மணி நேரங்களிலேயே ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, நீதிமன்ற எழுத்தராக பணிபுரியும் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in