மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு பாலியல் பலாத்காரம் அல்ல... உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு

பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம்

‘மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் அல்ல; உடலுறவில் மனைவியின் சம்மதமும் முக்கியமில்லை’ என கணவருக்கு ஆதரவான தீர்ப்பை மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

’தனது மனைவியுடன் ஒரு கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடுவதும், மனைவியின் சம்மதமின்றி உடலுறவை மேற்கொள்வதும் குற்றமல்ல’ என மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மனைவியின் வயது 15க்கு குறையாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் இந்த தீர்ப்பில் நீதிமன்றம் சேர்த்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்ற தீர்ப்பு

இந்திய சட்டத்தின் பார்வையில் ’மணவாழ்வின் பாலியல் பலாத்காரங்கள் ஒரு குற்றமாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படாதது’ இந்த தீர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. அடிக்கடி தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டி ஆண் ஒருவருக்கு எதிராக அவரது மனைவி பதிவு செய்த போலீஸ் புகார் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. மே 1 அன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரங்கள் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.

’ஒரு ஆண் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடுவது பலாத்காரம் ஆகாது, ஏனெனில் திருமண பலாத்காரம் இந்திய சட்டத்தில் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் இதுபோன்ற வழக்குகளில் மனைவியின் சம்மதம் முக்கியமற்றது’ என்று வழக்கை விசாரித்த நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ’மனைவிக்கு 15 வயதுக்குக் குறையாத நிலையில் கணவன் மனைவியுடன் குத உடலுறவில் ஈடுபடுவது, சம்மதம் பெறாது அமைந்தாலும் அது பலாத்காரத்தில் சேராது’ என்றும் அவரது தீர்ப்பு விளக்கம் தந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-வது பிரிவின் கீழ் 'கற்பழிப்பு' என்பதன் திருத்தப்பட்ட வரையறையின் பார்வையிலும், இயற்கைக்கு மாறான உடலுறவு என கணவருக்கு எதிராக மனைவி தெரிவித்த புகார் சாரமிழப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், ‘சட்டப்பூர்வமாகத் திருமணமான மனைவியுடன் வசிக்கும் கணவனின் இயற்கைக்கு மாறான உடலுறவு ஐபிசி 377வது பிரிவின் கீழ் குற்றமாகாது’ என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் - நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா
மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் - நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா

திருமணமாகி கருத்து வேற்றுமை காரணமாக கணவரை பிரிந்திருந்த மனைவி, சமரசத்திற்கு பின்னர் கணவருடன் சேர்ந்து வாழ தலைப்பட்டபோது எழுந்த பிரச்சினை தொடர்பாக, காவல் நிலையத்தில் புகாரின் பேரில் மனைவி வழக்கு பதியச் செய்தார். ’இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாக’ தனக்கு எதிரான அந்த போலீஸ் புகாரை ரத்து செய்யும் நோக்கில், உயர் நீதிமன்றத்தில் கணவர் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவியின் சம்மதமின்றி கணவர் உடலுறவு கொள்வதற்கு எதிராக பல நாடுகளிலு சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவ்வாறான மாற்றங்கள் இந்தியாவில் அமலாக வேண்டும் என்ற கோரிக்கைகளை மகளிர் அமைப்புகள் தொடுத்து வருகின்றன. அதே போன்று, பாலுறவிலும் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக அவரை கணவர் கட்டாயப்படுத்துவதும் கூடாது என்ற கோரிக்கையும் பெண்ணுரிமையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியில் மபி உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு புதிய விவாதங்களுக்கு வழி செய்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in