திருமண வீட்டில் உணவருந்திய இருவர் உயிரிழப்பு... சிகிச்சையில் இருக்கும் மற்றவர்கள் அச்சம்!

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் திருமண வீட்டில் உணவு அருந்தியவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடலூரை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், பள்ளி நீர்ஓடையைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 3-ம் தேதி குள்ளஞ்சாவடியில் உள்ள  திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவரும் உணவு அருந்தினர். 

அதனை சாப்பிட்ட பலருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட புலியூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (61), ராஜமாணிக்கம் மகன் ராஜ்குமார் (27), பாவாடை மகன் சுதாகர் (33), உக்கிர மூர்த்தி (62), ராஜலிங்கம் மகன் கண்ணன் (42), பழனிவேல் (50), கோவிந்தசாமி மகன் சிங்காரவேல் (50), சிகாமணி (61), தேவர் (51), ஆறுமுகம் மனைவி சின்னமணி (40), பொன்னையாள் (50), சுப்பிரமணியன் மனைவி சின்னம்மாள் (53) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு  மருத்துவமனை மற்றும் கடலூர், புதுச்சேரியில் உள்ள  தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.  அவர்களில் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம்  என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் அடுத்ததாக புலியூர் காட்டுசாகை தெற்குத் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் களிகானம் என்கிற நாராயணசாமி (55) நேற்று இரவு  உயிரிழந்துள்ளார். 

திருமண வீட்டில் உணவருந்திவர்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் அங்கு உணவு அருந்திய பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in