8 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்- சக மாணவியின் தந்தை வெறிச்செயல்!

கைது செய்யப்பட்ட வின்செண்ட் ராஜ்
கைது செய்யப்பட்ட வின்செண்ட் ராஜ்

மணப்பாறை அருகே இல்லம் தேடி கல்வி வகுப்புக்குள் புகுந்து மாணவனை மற்றொரு மாணவியின் தந்தை காலால் உதைத்து தாக்கும் கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகே உள்ள கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டார்வின் விஜய் என்ற 8 வயது சிறுவன் படித்து வருகிறான். நேற்று மாலை இல்லம் தேடி கல்வி சார்பில் நடத்தப்படும் வகுப்பில் மாணவன் படித்துகொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பள்ளியில் படித்து வரும் மாணவியின் தந்தை வின்சன் ராஜ் என்பவர் குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்து சிறுவனை தகாத வார்த்தையில் திட்டியும், காலால் எட்டி உதைத்தும் தாக்க தொடங்கினார். அங்கிருந்த ஆசிரியை தடுக்க முயற்சித்த போதும் விடாமல் சிறுவனை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் தந்தை அருளப்பன் என்பவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை, வின்சென்ட் ராஜ் காலால் உதைத்து தாக்கிய கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in