காலாவதியான பீர் குடித்த இருவருக்கு பாதிப்பு... டாஸ்மாக் ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்!

பீர் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை
பீர் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை

சீர்காழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் பீர் வாங்கி குடித்த இருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

கடையில் விற்கப்பட்ட காலாவதியான டின்பீர்கள்
கடையில் விற்கப்பட்ட காலாவதியான டின்பீர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி பகுதியில் உள்ள  அரசு டாஸ்மாக் மதுபான கடையில்  காரைமேடு பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் நாங்கூர் மேலத் தெருவைச் சேர்ந்த சார்லஸ் (27) ஆகிய இருவர் நேற்று முன்தினம்  டின் பீர் வாங்கி குடித்துள்ளனர். 

அவர்கள் அதை அருந்திய சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் வந்துள்ளது. இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். 

போலீஸ் விசாரணையில், அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதியான பீரைக் குடித்தது தெரியவந்தது. கடையில் விற்கப்பட்ட காலாவதியான பீர் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து அலட்சியமாக செயல்பட்டதாக தென்னலக்குடி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வடிவேல், விற்பனையாளர் சங்கர் உள்ளிட்ட மூவரை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in