மது விற்பது தொடர்பாக பயங்கர மோதல்... சண்டையை விலக்கச் சென்ற மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை!

கொலை செய்யப்பட்ட மூதாட்டி தயவ்வா சலமந்தபி.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி தயவ்வா சலமந்தபி.

மது விற்பனையில் ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற மூதாட்டியை கத்தியால் குத்திக்கொலை செய்தது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், முதோலா தாலுகாவில் உள்ள நிங்காபுராவைச் சேர்ந்தவர் தயவ்வா சலமந்தபி(60). இவரது அண்ணன் விட்டலாவுக்கும், மதாரா என்பவரது குடும்பத்திற்கும் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நேற்று நள்ளிரவு விட்டலா வீட்டிற்கு தயவ்வா சென்றிருந்தார்.

அப்போது விட்டலாவிற்கும், மதராவின் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது தயவ்வா, அந்த சண்டையை விலக்கி விடச்சென்றார். அப்போது தயவ்வாவை தகாத வார்த்தைகளால் திட்டி நெஞ்சில் கத்தியால் மதாரா குடும்பத்தினர் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தயவ்வா சலமந்தபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், யமனப்பா, பீமப்பா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இக்கொலை தொடர்பாக லோகாபுரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மது விற்பனை தொடர்பாக விட்டலா, மதரா குடும்பத்திற்கு இடையே தகராறு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக அவருக்குள் மோதலும் ஏற்கெனவே நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

சண்டையை விலக்கச் சென்ற பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in